இது மிகவும் ஆபத்தானது! – அன்புமணி ராமதாஸ்

மழை நீர் தேங்கி ஆறு போல காட்சியளிக்கின்றன. இது மிகவும் ஆபத்தானது என அன்புமணி ட்வீட். 

சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பெரும்பாலான பள்ளங்களில் இன்னும் பணிகள் நிறைவடையவில்லை என்றும், இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பெரும்பாலான பள்ளங்களில் இன்னும் பணிகள் நிறைவடையாததால், கடந்த சில நாட்களில் பெய்த மழை நீர் தேங்கி அவை ஆறு போல காட்சியளிக்கின்றன. மற்ற பகுதிகளிலும் மழை நீர் வடிய தாமதம் ஆகிறது!

இன்னும் பல இடங்களில் மழைநீர் வடிகால்களுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டாலும், பக்கவாட்டு சுவர்களும், மேல்தளமும் இன்னும் அமைக்கப்படவில்லை. அத்தகைய இடங்களில் தான் மழை நீர் தேங்கி ஆறு போல காட்சியளிக்கின்றன. இது மிகவும் ஆபத்தானது!’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment