இது எங்களின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – சு.வெங்கடேசன் எம்.பி

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் புதிய ரயில் பாதைகளை அமைக்க ரூ.1,057.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பது எங்கள் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். 

நடப்பு 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு மொத்தம் ரூ.11,313 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்துக்கு ரூ.6,080 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2009-14-ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.879 கோடியைவிட 7 மடங்கு அதிகம்.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறுகையில், தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் புதிய ரயில் பாதைகளை அமைக்க ரூ.1,057.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரட்டைரயில் பாதை அமைக்க ரூ.1,321.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தந்து ட்விட்டர் பக்கத்தில், ‘ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான புதிய வழித்தட திட்டங்களுக்கு தலா ரூ.1000 மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்ததை கடந்த நான்கு ஆண்டுகளாக கடுமையாக விமர்சித்து வந்தோம். இந்த ஆண்டு 1,057 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது எங்களின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி’ என பதிவிட்டுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment