ரயில் கட்டணம் அதிகரிப்புக்கு இது தான் காரணம்…! மத்திய ரயில்வே துறை அமைச்சர் விளக்கம்…!

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் கூறுகையில்,  கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையிலும், அத்தியாவசியமற்ற பயணத்தை குறைக்கும் வகையிலும் ரயில் கட்டணம் அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ரயில் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்ட  நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து சேவைகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில், நீண்ட தூரம் செல்லக்கூடிய சில சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அதன்பின் சிறப்பு ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட நிலையில், குறுகிய தொலைவில் செல்லும் ரயில்களும் சிறப்பு  ரயில்களாக இயக்கப்பட்டது.

இந்நிலையில், குறுகிய தூரம் செல்லும் ரயில்களின் கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ரயில் கட்டணம் அதிகரிப்பு குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் கூறுகையில்,  கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையிலும், அத்தியாவசியமற்ற பயணத்தை குறைக்கும் வகையிலும் ரயில் கட்டணம் அதிகரித்துள்ளதாக  விளக்கமளித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.