இது மணிரத்னத்தின் கற்பனை.! நெகிழ்ச்சியுடன் பேசிய கார்த்தி.!

1950-களில் பத்திரிகைத் தொடராக வெளி வந்து இன்றளவும் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்க படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசர் மிகவும் பிரமாண்டமாக இருந்தது. இந்த டீசர் விழாவும் நேற்று சென்னையில் நடைபெற்றது.

படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் கார்த்தி அந்த விழாவில் பேசியது , “இந்தப் படத்தை பத்தி நான் என்ன சொல்றது.? இந்த மேடை எனக்கு ரொம்ப முக்கியமான மேடை. மணி சாருடன் உதவி இயக்குனராக இருந்தேன், மணி சார்கூட காரில் பின்னாடி லக்கேஜோட போன பையன் நான்.

மணி சார் இன்னைக்கு எனக்கு இவ்வளவு பெரிய மேடையைக் கொடுத்திருக்கார். அதுக்கு அவருக்குப் மிகபெரிய நன்றி நம்மள யாரு ஆண்டாங்க, நம்ம எப்படி சூறையாடப்பட்டோம், நம்ம எப்படி அடிமையானோம் அப்படிங்கிற வரலாற்றைப் படிச்சிருப்போம்.

நம்ம இப்போ “தமிழன் தமிழன் என்று சொல்கிறோம். ஆனால், அப்படி என்னடா நீ தமிழன்னு கேட்டா நம்மகிட்ட பதில் இருக்காது. நம்மளுடைய மன்னர்கள் எப்படி இருந்தாங்க, நம்ம நாடு எப்படி இருந்தது, நம்ம அரசாட்சி எப்படி இருந்ததுன்னு கேட்டா நமக்குத் தெரியாது. ஆனா அதை நாம தெரிஞ்சிக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம். இந்த புக் படிச்ச பலருக்கும் ஒவ்வொரு கற்பனை இருக்கும். இது மணி சாருடைய கற்பனை” என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment