இது இந்தியாதான்…‘ஹிந்தி’யா அல்ல!” இது ஆதிக்கத்தின் வெளிப்பாடே- முதல்வர் மு.க.ஸ்டாலின்

“இது இந்தியாதான்.. ‘ஹிந்தி’யா அல்ல!” தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்குக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘இந்தி திவஸ்’ என்ற பெயரில் இந்தி மொழி நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள்,

இந்தி மொழி நாள் விழாவில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள், ‘நமது கலாசாரம், வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை நாம் கற்க வேண்டும்’ என்றும், ‘நாட்டின் ஆட்சி நிர்வாகம், ஆராய்ச்சி ஆகியவை நம் உள்ளூர் மொழி மற்றும் அலுவல் மொழிகளில் நடக்க உறுதியேற்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் இது இந்தியாதான்.. ‘ஹிந்தி’யா அல்ல!” தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்குக எனவும்,

கலாசாரத்தையும் வரலாற்றையும் புரிந்துகொள்ள இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்திய ஒன்றியத்தின் “வேற்றுமையில் ஒற்றுமை’ என்கிற பண்பாட்டிற்கு நேர் எதிரானது.

இந்தியாவின் வரலாறும் பண்பாடும் இந்தி மொழியில் புதைந்திருக்கவில்லை. இந்தி என்கிற மொழி உருவாவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழை முதன்மை மொழியாகக் கொண்ட திராவிட மொழிக் குடும்பமும், அதன் பண்பாட்டு விழுமியங்களும் இன்றைய இந்திய ஒன்றிய நிலப்பரப்பையும் அதன் எல்லைகளைக் கடந்தும் பரவியிருந்ததை வரலாற்றாசிரியர்கள் பலரும் எடுத்துக் காட்டியுள்ளனர்.

அத்தைகைய சிறப்பு வாய்ந்த தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்கிற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும்.

இந்தி தினத்திற்குப் பதில் ‘இந்திய மொழிகள் நாள்’ எனக் கொண்டாடி கலாசாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்துங்கள் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment