‘இது தவறான தகவல்’ – அமைச்சர் அன்பில் மகேஸ்-க்கு H1N1 காய்ச்சல் பாதிப்பு : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் அன்பில் மகேஸ் H1N1 காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. 

தமிழக பல்லகிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர காய்ச்சல் காரணமாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சோதனை செய்தததில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுளளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் அன்பில் மகேஸ் H1N1 காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குணமடைந்து இரண்டு நாட்களில் வீடு திரும்புவார். அமைச்சர் அன்பில் மகேஸ்-க்கு டெங்கு காய்ச்சல் என்பது தவறான தகவல் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment