ஜூலை 25ம் தேதி திரவுபதி முர்மு பதவி ஏற்பு..! பாஜக சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்..!

ஜூலை 25ம் திரௌபதி முர்மு 15-வது குடியரசு தலைவராக பதவியேற்க உள்ளார். 

இந்தியாவின் 14வது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த (ஜூலை) 18ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் 15வது  குடியரசு தலைவர் பதவிக்கு   பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஜூலை 25ம் 15-வது குடியரசு தலைவராக பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில், திரவுபதி முர்முவின் வெற்றியை பழங்குடியின மக்கள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து ஜூலை 25ம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கு பாஜக சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment