திருப்பதியில் இன்று முதல் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசம்.!

  • மலைபாதை வழியாக கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
  • இந்நிலையில் அனைத்து பக்தர்களுக்கும் இன்று முதல் தலா ஒரு லட்டு இலவசமாக வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி கோயிலில் இலவச தரிசனம், சர்வ தரிசனம் , திவ்ய தரிசனம், செய்யும் பக்தர்களுக்கு சலுகை முறையில் ரூ.70 -க்கு தலா 4 லட்டுகள் வழங்கப்பட்டு வந்தது.

மேலும் மலைபாதை வழியாக கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் அனைத்து பக்தர்களுக்கும் இன்று முதல் தலா ஒரு லட்டு இலவசமாக வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது.

இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.இலவச லட்டு போக கூடுதலாக லட்டு பெற பக்தர்கள் விருப்பினால் லட்டு விற்பனை கவுன்டர்களில் ஒரு லட்டிற்கு ரூ. 50 ரூபாய் செலுத்தி எத்தனை  லட்டு வேண்டுமென்றாலும் வாங்கி கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.