சிறப்பு சலுகை.! காவலன் செயலியை பயன்படுத்தும் பெண்களுக்கு உணவில் 10% தள்ளுபடி.! அசத்தும் இளைஞர்.!

  • மதுரையில் மீனாட்சி மெஸ் உணவகத்தில், காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ள பெண்களுக்கு உணவில் 10% சதவீதம் சிறப்பு தள்ளுபடி கொடுத்த இளைஞர் ராஜபிரபு.
  • காவலன் செயலியை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, அவரது மெஸ்ஸில் போஸ்டர் ஒட்டி அதில் நம் குடும்பங்களின் பாதுகாப்பிற்கும், தாய்மானவர்களின் நலன் கருதியும், எங்களால் முடிந்த சிறு விழிப்புணர்வு என்று அச்சியிடப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை, வழிப்பறி, திருட்டு, கொலை போன்ற செயல்களால் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் இரவு நேரங்களில் தனியாக வெளிய சென்றுவர மிகவும் அச்சப்பட்டு வருகின்றன நிலையில், தமிழகத்தில் பெண்கள் மீதான குற்றங்களை குறைக்கும் விதமாக தமிழக காவல்துறையால் காவலன் என்ற செயலி உருவாக்கப்பட்டு, அதனை சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது. அதில் எதாவது உதவி தேவைப்பட்டால் SOS என்ற பட்டனை அழுத்தினால் போதும் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அனுப்பப்படும். பின்னர் விரைவாக சம்பவ இடத்துக்கே வந்து உதவி புரிவார்கள்.

இந்நிலையில், மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்த ராஜபிரபு என்ற இளைஞர் மீனாட்சி மெஸ் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். அந்த உணவகத்தில் காவலன் செயலியை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, அவரது மெஸ்ஸில் சிறப்பு சலுகை என போஸ்டர் ஒட்டி அதில் நம் குடும்பங்களின் பாதுகாப்பிற்கும், தாய்மானவர்களின் நலன் கருதியும், எங்களால் முடிந்த சிறு விழிப்புணர்வு என்று அச்சியிடப்பட்டுள்ளது. மேலும், காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ள பெண்களுக்கு உணவில் 10% சதவீதம் சிறப்பு தள்ளுபடி என உணவகத்துக்கு வரும் பெண்களுக்கு வழங்கி வருகிறார். இவர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு பெண்கள் மத்தியிலும், காவல்துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

காவலன் செயலியை இதுவரை 5 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். இந்த செயலியை கல்லூரி மாணவிகள், பணியாற்றும் பெண்கள், தாய்மார்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பதிவிறக்கம் செய்து வருகிறார்கள் என குறிப்பிடப்படுகிறது.