2024 மக்களவை தேர்தல்.! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கை வைத்த திருமாவளவன்.! 

நாடுமுழுவதும் பாஜக எதிர்ப்பு சக்திகளை சந்தித்து ஒருங்கிணைக்க வேண்டும் என திருமாவளவன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

நேற்று தனது பிறந்தநாள் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்பது சரியாக இருக்காது. காங்கிரஸ் கட்சியை இணைத்து அனைவரும் ஓரணியில் திரளவேண்டும். என குறிப்பிட்டு பேசியிருந்தார்.

திருமாவளவன் பேட்டி : இது குறித்து, தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் அல்லாத 3வது அணி நாட்டுக்கு நல்லதல்ல என்பதை அழுத்தமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தற்போதே அவர் வியூகம் அமைத்துள்ளார்.

சுற்றுப்பயணம்  : அவரது பிறந்தநாள் விழா வெறுமனே செய்தியாக மட்டும் இல்லாமல், 2024 தேர்தலுக்கு தொடக்க அரசியல் பரப்புரையாக அமைந்துள்ளது. இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முன்னெடுக்க வேண்டும். அவர் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.

பாஜக எதிர்ப்பு சக்திகள் : நாடுமுழுவதும் பாஜக எதிர்ப்பு சக்திகள் தான் அதிகம். அதனை ஒருங்கிணைக்க வேண்டும். அண்டை மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் கேசிஆர், உத்தவ் தாக்கரே , டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன் என அனைவரையும் சந்தித்து பாஜக எதிர்ப்பு சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும் என திருமாவளவன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment