அம்பேத்கரை பற்றி பேசாமல் காந்தியின் வரலாற்றை எழுத முடியாது.! திருமாவளவன் கருத்து.!

அம்பேத்கரை இணைக்காமல், அவரை பற்றி பேசாமல் மகாத்மா காந்தியின் வரலாற்றை எழுதவே முடியாது. அண்ணல் அம்பேத்கர் பெயரை உச்சரிக்காமல் இந்தியவில் அரசியல் செய்ய முடியாது. – திருமாவளவன் பேச்சு.

நேற்று, சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, மணி விழா கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு, ஜெய்பீம் 2.0 செயல் திட்டம் தொடங்கப்பட்டது.

அதனை தொடங்கி வைத்து பேசிய திருமாவளவன், ஜெய்பீம் 2.0 செயல் திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 6000 கிராமங்களில் அம்பேத்கர் படிப்பகங்கள் உருவாக்க வேண்டும். 1971ஆம் ஆண்டுக்கு பின் இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட தலைவர் அண்ணல் அம்பேத்கர் தான்.

நாடாளுமன்றத்தில் பெரும்பாலான நேரங்களில் உறுப்பினர்கள் அம்பேத்கரின் கருத்துக்களை தினசரி மேற்கோள்காட்டி பேசுவார்கள். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து உச்சரிக்கப்படும் ஒரு தலைவர் பெயர் என்றால் அது அம்பேத்கரின் பெயர் தான்.

அம்பேத்கரை இணைக்காமல், அவரை பற்றி பேசாமல் மகாத்மா காந்தியின் வரலாற்றை எழுதவே முடியாது. அண்ணல் அம்பேத்கர் பெயரை உச்சரிக்காமல் இந்தியவில் அரசியல் செய்ய முடியாது என்ற கட்டாயம் தற்போது எழுந்துள்ளது. அம்பேத்கரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்கள் இன்னும் முறையாக தொகுக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   அதிகமான மக்களை சென்றடைய வேண்டும் என்ற வகையில் தான் இந்த ஜெய் பீம் 2.0 செயல் திட்டம் உருவாக்கபட்டுள்ளது. என பல்வேறு கருத்துக்களை பேசியிருந்தார் விசிக தலைவர் திருமாவளவன்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment