தினம் ஒரு திருப்பாவை

  • மார்கழி மாதம் மிகவும் மதிப்பிற்குரிய ஒரு மாதமாகும்.
  • இம்மாத்தில் ஆழ்வார்களில் ஒருவராகிய ஸ்ரீஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களையும் அதன் பொருளையும் அறிவது மட்டுமல்லாமல் அதனைப் பாடி  திருமாலின் அருளைப் பெறுவோம்.

பாடல் : 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீ!

சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோன் பன்குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாராயணணே நமக்கே பறைதருவான்

பாரோ புகழ்ப் படிந்தேலோ ரெம்பாவாய்.

– ஸ்ரீஆண்டாள்-

பொருள் :-

பொருத்தமான அணிகலங்களை அணிந்த பெண்களே! செல்வம் கொழிக்கும் ஆயர்பாடியிலே உள்ள செல்வச் சிறுமியர்களே நாராயணன் வேல் கொண்ட கொடிய தொழிலுடையவனாகிய நந்தகோபன் மகன்;அழகு நிறைந்த கண்களை உடையவன்,கதிர் விரிக்கும் முழுமதி போன்ற முகமுடையவன்,அவன் நாம் விரும்பிய பொருளெல்லாம் வழங்குவான்,இன்று மார்கழி மாதத்துப் பௌர்ணமி நல்ல நாள்,உலகத்தார் புகழும் வண்ணம் நீராட வருபவர்களே! வாருங்கள்!

 

author avatar
kavitha