இவர்களும் நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரிகளில் சேரலாம் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

பொறியியல் படிப்புக்கான 3வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 13ம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. வரும் 13ம் தேதி 3-வது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளது. பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 5ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தார்.

மேலும், 8ம் தேதி கலந்தாய்வு ஒரே கட்டமாக நடைபெறும் என தெரிவித்துள்ளார். பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை 4 கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதும் அக்டோபர் இறுதியில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்றும் 12- ஆம் துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரிகளில் சேரலாம் எனவும் அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், ஓ.சி. பேருந்து கட்டணம் பற்றி விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment