தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லை., ஆனா இது கன்பார்ம் – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லை, மினி ஊரடங்குதான் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளது. குறைந்திருந்த பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, நாள் ஒன்றுக்கு பாதிப்பு 1000-ஐ கடந்து வருகிறது. இதனால் தமிழக தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்தவகையில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு ஜனவரி திறக்கப்பட்ட பள்ளிககள் மீண்டும் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும், கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. அனால் தேர்தல் நடைபெற உள்ளதால் முழு ஊரடங்கு தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லை, மினி ஊரடங்குதான் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த குறிப்பிட்ட தெரு, வீடு ஆகிய பகுதிகளில் மட்டும் ஊரடங்கை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என கூறியுள்ளார்.

ஆகையால், சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பின் கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து கண்டிப்பாக முழு ஊரடங்கு தமிழகத்தில் மீண்டும் அமல்படுத்தப்படும் என தற்போது அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை பார்த்தால் தெரிய வருகிறது. இருப்பினும் கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள தங்களது சுய பாதுகாப்பு விதிமுறையை அனைவரும் பின்பற்ற வலிறுத்தப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்