மறுசீராய்வு மனுவினால் உச்சநீதிமன்ற தீர்ப்பு மாற வாய்ப்பில்லை.! திருமாவளவன் கருத்து.!

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த சீராய்வு மனுவால் உச்சநீதிமன்ற தீர்ப்பு தவறு என தீர்ப்பு  வந்த்துவிடாது. – திருமாவளவன் பேச்சு.

ராஜீவ் காந்தி கொலை குற்றத்தில் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலையானதை அடுத்து நளினி, முருகன், சாந்தன் உட்பட 6 பேரும் அண்மையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மறுசீராய்வு மனு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், இது எதிர்பார்த்த ஒன்று தான். இந்த சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதால், உச்சநீதிமன்ற தீர்ப்பு தவறு என தீர்ப்பு  வந்த்துவிடாது. இந்த தீர்ப்பில் ஆளுநர் முடிவு எடுக்க தவறிவிட்டார். மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும். என தெரியவந்துள்ளது என தனது கருத்தினை திருமாவளவன் முன்வைத்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment