தோனி போல் இன்னொரு கேப்டன் வரப்போவதில்லை..! சுனில் கவாஸ்கர் புகழாரம்..!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், தோனி போல் ஒரு கேப்டன் இல்லை எனப் புகழ்ந்துள்ளார்.

16-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 24-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சென்னை சேப்பாக் மைதானத்தில் விளையாடவுள்ளது.

இந்த சீசனில் சென்னை அணி 4 போட்டிகள் விளையாடி 2 போட்டியில் வெற்றியை பதிவு செய்து புள்ளி விவர பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இதைப்போல பெங்களூர் அணியும் 4 போட்டிகள் விளையாடி 2 போட்டியில் வெற்றியை பதிவு செய்து புள்ளி விவர பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

தோனியின் தலைமையின் கீழ், சென்னை சூப்பர் கிங்ஸ் நான்கு முறை இந்தியன் பிரீமியர் லீக்கை வென்றது மற்றும் ஐந்து முறை இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் அளித்த பேட்டியில், எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வரும் விதம் மற்றும் கடினமான சூழ்நிலைகளில் இருந்து எப்படி மீள்வது என்பது சிஎஸ்கேவுக்கு மட்டுமே தெரியும் என்று பாராட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், “போட்டியில் கடினமான சூழ்நிலைகளில் இருந்து எப்படி மீள்வது என்பது சென்னை அணிக்கு தெரியும், எம்எஸ் தோனியின் தலைமையில் தான் இது சாத்தியமானது என்றும் 200 போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பது மிகவும் கடினம். அது கேப்டனின் தனிப்பட்ட செயல்திறனையும் பாதிக்கும். ஆனால், தோனி வித்தியாசமான கேப்டன், அவரைப் போல் ஒரு கேப்டன் இருந்ததில்லை, அவரைப் போன்ற ஒருவர் எதிர்காலத்திலும் வரவும் மாட்டார்” என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் புகழ்ந்துள்ளார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment