மூன்றே மூன்று கேள்விகள் தான்.! தெறித்து ஓடிய தமிழிசை!

தனியார் தொலைக்காட்சி நெறியாளர் 3 கேள்விகளில் தமிழிசையை எழுந்து செல்ல வைத்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடுகிறார் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார்.அதேபோல் திமுக சார்பாக கனிமொழி போட்டியிடுகிறார்.

இந்நிலையில் பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு பேட்டி அளிக்க சென்றார்.அப்போது அந்த நெறியாளர் கேட்ட 3  கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறியது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முதலாவதாக நெறியாளர் தமிழிசையிடம் கேட்ட கேள்வி,தேர்தல் அறிக்கையில் ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்து  எந்த ஒரு அறிவிப்பும் இல்லை என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த அவர் ஸ்டெர்லைட் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது என்றும் வழக்கில் உள்ள ஒன்றை மட்டும் எப்போதும் கேள்வி கேட்காதீர்கள் என்று தெரிவித்தார்.

அடுத்த கேள்வியாக நீட் தேர்வு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில்  பியூஸ் கோயல் அது குறித்து வாக்குறுதி அளித்துள்ளார் என்று கேள்வி எழுப்பினார்.அதற்கும் தமிழிசை கூறுகையில்,நீட் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்று சமாளித்தார்.

இறுதியாக ஒரு கேள்வி என்று கேட்டார்.அதாவது உங்கள் கூட்டணி கட்சிகள் அனைத்தும் எழுவர் விடுதலைக் குறித்து ஒரே கருத்துடன் இருக்கிறார்கள்?அது பற்றி உங்கள் கருத்து என்று கேட்க  அதற்கு தமிழிசை ஒரே ஒரு நிமிஷம் தம்பி நீங்கள் நாளைக்கு வருகிறீர்களா என்று கிளம்பி விட்டார்.

வெறும் 3 கேள்விகளில் தமிழிசையை எழுந்து செல்ல வைத்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Recent Posts

ஆறுதல் வெற்றியை பெறுமா பஞ்சாப் அணி ? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…

59 mins ago

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

8 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

8 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

14 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

14 hours ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

14 hours ago