தீபாவளியை இனிமையாக்க மில்க் கேக்….!!!!

பண்டிகை காலங்களில் நாம் கடைகளில் பலகாரங்களை வாங்குவதை விட, வீட்டில் செய்வதை தான் நாம் அதிகமாக விரும்புவோம். அதிலும் கேக் என்றாலே நம்மால் செய்ய முடியாது, கடையில் தான் வாங்க வேண்டும் என்று நினைப்போம். இனி அந்த கவலையை விடுங்க. இப்போது மில்க் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

  • பால் – 2 லிட்டர்
  • சர்க்கரை –  1 கப்
  • எலுமிச்சை சாறு – பாதி எலுமிச்சை
  • ஏலக்காய் தூள் – சிறிதளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் பாலை ஊற்றி அதை மிதமான சூட்டில் வைத்து, பாத்திரத்தில் பிடிக்காதவாறு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பால் 1 லிட்டராக வற்றி போகும் வரை கிளற வேண்டும். பின் அதில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து விட வேண்டும். அவ்வாறு செய்யும் போது பால் திரைந்து வரும். அப்போது 1 கப் சர்க்கரை சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பின் வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய் தூள் போட வேண்டும். நன்றாக கிளறி அது கெட்டியான பதத்திற்கு வரும் போது, அதனை நெய் தடவிய பாத்திரத்தில் எடுத்து சமமாக பரப்பி வைக்க வேண்டும். அதனை 3 அல்லது 4 மணி நேரம் நன்றாக ஆறவிட்ட பின், எடுத்து சமமாக வெட்டி பரிமாற வேண்டும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment