டிக் டாக்கில் "நான் தலைகீழாகத்தான் குதிக்க போகிறேன்"என கூறி முதுகெலும்பை முறித்து கொண்ட இளைஞர்! வைரலாகும் வீடியோ !

சமூக வலைத்தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுவதில் டிக் டாக் செயலி முதலிடத்தில் உள்ளது.இந்த டிக் டாக் செயலியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். டிக் டாக் செயலில் தங்களிடம் உள்ள நடிப்பு , நடனம் போன்றவற்றை விடீயோக்கள் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.
சில பேர் மக்களிடம் லைக்குகள், ஷேர்கள் அதிகம் பெற வேண்டும் என்பதற்காக சில சிலர் விபரீத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி கர்நாடகாவில் கோடே கெரே கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் தனது கைகளை  தரையில் படாமல் நண்பனின் கையில் மீது கால்களை வைத்து பேக் பல்டி அடிக்க முயற்சி செய்தார்.
https://youtu.be/UajNemchaho
அப்போது எதிர்பாராதவிதமாக தரையில் அவரது தலை மோதியது. அதில் குமாரின் முதுகெலும்பு  முறித்தது.வலி தாங்க முடியாமல் கதறி அழுத குமாரை அவருடைய நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.குமாருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

author avatar
murugan