அடுத்த 6 மணி நேரத்திற்கு ஒடிசாவில் மோசமான வானிலை நிலவும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஒடிசாவில் இன்று ஃபானி புயல் கடற்கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் ஒடிசா மாநிலத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள 10 லட்சத்திற்கு மேல் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில்  ஃபானி புயல் மணிக்கு சுமார் 17-200 கி. மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒடிசாவில் ஃபானி புயல் காரணமாக மணிக்கு 240 – 245 கி.மீ வரை சூறாவளி காற்று வீசி வருகிறது.

ஒடிசா கடற்கரை ஓரங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தும் வருகிறது. ஃபானி புயல் பாதிப்புகளுக்கு உதவிகள் பெற 1938 என்ற உள்துறை அமைச்சகத்தின் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் அடுத்த 6 மணி நேரத்திற்கு ஒடிசாவில் மோசமான வானிலை நிலவும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவித்து உள்ளது.

author avatar
murugan

Leave a Comment