உலகின் மிக வயதான நாய் – ரகசியத்தை பகிர்ந்துகொண்ட நாயின் உரிமையாளர்!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள க்ரீம் கேஸ் எனும் நகரில் வாழக்கூடிய டோபிக் கீத் என்னும் நாய் உலகின் மிக வயதான நாய் எனும் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த நாய்க்கு கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி இருபத்தியோரு வயது ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ள இந்த நாயின் உரிமையாளரான கிசெலா என்பவர் இந்த நாய் குறித்து கூறுகையில், சில மாத குட்டியாக இருந்த பொழுது இந்த நாயை விலங்குகள் காப்பகத்தில் இருந்து தடுத்ததாகவும், தனது வாழ்நாளில் பெரும்பகுதியை இந்த நாயுடன் கழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் டோபிக் கீத் தனது இருபது வயதை கடந்த போது எனக்கு சிறு சந்தேகம் ஏற்பட்டது. ஏனென்றால், 16 முதல் 18 வரை தான் ஒரு நாயின் வாழ்நாள் காலம் இருக்கும் என நாங்கள் நினைத்தோம். எங்கள் நாய்  இருபது வயதை கடந்த பொழுது, குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டு இதுதான் உலகின் பழமையான நாயாக இருக்குமோ என சொல்லிக் கொண்டோம். தற்பொழுது அது உறுதிப்பட்டுள்ளது.

எனது சிறிய பையன் இவ்வாறு கின்னஸ் ரெக்கார்டில் சாதனை படைத்து புதிய மைல் கல்லை எட்டி இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. மேலும், இதன் நீண்ட ஆயுளின் ரகசியம் என்னவென்றால், வழக்கமாக நான்  கொடுக்கும் உடற்பயிற்சியும், ஆரோக்கியமான காய்கறிகள், அரிசி மற்றும் கோழிக்கறி உணவும், அன்பான எனது வீடும் தான், எனது நாயின் நீண்ட ஆயுளின் இரகசியம் என நாயின் உரிமையாளர் கிசெலா  தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal