உயிருக்கு போராடிய இளைஞரை மீட்டு தோளில் சுமந்து சென்ற பெண் காவலர்…!

மழை பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், உயிருக்கு போராடிய இளைஞனை தோளில் தூக்கி சென்ற பெண் காவல் ராஜேஸ்வரி.   

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் கடும் கனமழை பெய்த நிலையில் போலீசார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் உதய என்ற  மழையில் நனைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள் இளைஞரை தூக்கி சென்று ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மீட்பு பணி நடைபெற்ற இடத்தில் சில பணியாளர்கள் நின்று கொண்டு இருந்த நிலையில்,  அர்ப்பணிப்போடு அவரே  களத்தில் இறங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment