காலையில் எழுந்தவுடன் உண்ண வேண்டிய நீராகாரங்கள்!

நாம் நமது அன்றாட வாழ்க்கையில் பல நற்செயல்களை வழக்கமாக்கி கொள்கிறோம். ஆனால், நம்மில் அதிகமானோருக்கு இருக்கும் ஒரு தீய பழக்கம் என்னவென்றால், அது காலையில் எழுந்தவுடன் தேநீர் குடிக்கும் பழக்கம். இந்த பழக்கம் நல்ல பழக்கமல்ல.

தற்போது நாம் இந்த பதிவில் காலையில் எழுந்தவுடன் என்னென்ன நீராகாரங்களை பருகினால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

குளிர்ந்த தண்ணீர்

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது மிக சிறந்தது. சிலர் வெந்நீர் குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பர். ஆனால், குளிர்ந்த நீரை குடித்தால், நமது உடலில் உள்ள அசிட்டிக் தன்மையை குறைத்து நமது உடலை குளிர்ச்சியாக்குகிறது.

வெந்தய தண்ணீர்

வெந்தயத்தை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, காலையில் அந்த தண்ணீரை பருகி வந்தால், நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, உடலை குளிர்ச்சியாக்குகிறது.

அருகம்புல் சாறு

காலையில் எழுந்தவுடன் அருகம்புல் சாறு குடிப்பது மிகவும் நல்லது. இந்த சாற்றினை குடித்தால், வயிற்றுப்புண் பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. மேலும் இது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

வெள்ளைப்பூசணி சாறு

வெள்ளைப்பூசணி சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகிறது. மேலும், தொப்பை மற்றும் ஊளை சதையை குறைக்க விரும்புபவர்கள் இந்த சாற்றினை குடிப்பது மிகவும் நல்லது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment