ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வெற்றியின் பெருமை முதல்வரையே சாரும் – ஈவிகேஎஸ் இளங்கோவன்

மதசார்பற்ற கூட்டணி மீது தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தேர்தல் முடிவு காட்டுகிறது என ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி. 

கடந்த மாதம் 27-ஆம் தேதி  ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைதேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்  பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

3  சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் 39 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவேன். ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நானும் எம்எல்ஏவாக பங்கு பெறுவதில் பெருமையாக உள்ளது.

முதல்வருக்கு நன்றி 

ராகுல் காந்தி மீது தமிழக மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதே இந்த வெற்றி காட்டுகிறது. மதசார்பற்ற கூட்டணி மீது தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தேர்தல் முடிவு காட்டுகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முதல்வர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டதற்கு நன்றி. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வெற்றியின் பெருமை முதல்வரையே சேரும். இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்  என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment