வெனிஸ் திரைப்பட விழா திட்டமிட்டபடி நடைபெறும் – வெனிஸ் ஆளுநர் லூகா ஸாயா !

வெனிஸ் திரைப்பட விழா திட்டமிட்டபடி நடைபெறும் வெனிஸ் ஆளுநர் லூகா ஸாயா தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், கொரோனா அச்சுறுத்தலால், பல விழாக்கள், போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது சில நாடுகளில் சில போட்டிகள் ஆளில்லாமல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், உலகில் நடைபெறும் சர்வதேச விழாக்களில் ஒன்று வெனிஸ் திரைப்பட விழா. இந்த விழா கொரோனா அச்சுறுத்தலால் இந்தாண்டு நடைபெறுமா? என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில், இத்திரைப்பட விழா திட்டமிட்டபடி செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும், விழாவில் குறைவான திரைப்படங்களே திரையிடப்படும் என்றும் வெனிஸ் ஆளுநர் லூகா ஸாயா தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.