20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று அறிவிக்கிறார் -மத்திய நிதியமைச்சர்

மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார தொகுப்பு விவரங்களை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று முன்தினம் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொளி மூலமாக மோடி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நேற்று  இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், இந்த நிதித் தொகுப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 10 சதவீதம் என்ற அளவுக்கு பெரிய நிதித் தொகுப்பாக இருக்கும். சிறு, குறு தொழில் முனைவோர், விவசாயிகள் உள்ளிட்ட பல துறையினருக்கும் இந்த நிதி ஊக்கமளிக்கும் என மோடி கூறினார்.

இந்நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார தொகுப்பு விவரங்களை இன்று  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்று நேற்று மோடி கூறினார். கடந்த மார்ச் மாதம் ரூ .1.7 லட்சம் கோடி நிவாரண திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆனால் இந்த நிதி போதாது என்று அப்போது  விமர்சிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk