Thursday, November 30, 2023
Homeதமிழ்நாடுஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி.! உச்சநீதிமன்றம் உத்தரவு.!

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி.! உச்சநீதிமன்றம் உத்தரவு.!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் 19 அல்லது நவம்பர் 26 என இரு தேதிகளில் ஏதேனும் ஒரு தேதியில் அனுமதி வழங்கப்டும் என்றும், ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த கேட்டுள்ள தேதிகளில் வேறு சில மத விழாக்கள் நடைபெற இருந்ததால் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது என்றும், பேரணி செல்லும் பாதையை மாநில அரசு தீர்மானிக்க முடியும் என்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.