அதிதீவிர புயலாக மாறுகிறது வாயு புயல்!நாளை காலை கரையை கடக்கும் !இந்திய வானிலை மையம்

வாயு புயல் அதிதீவிர புயலாக மாறுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,அரபிக்கடலில் தென்மேற்கு பகுதியில் 680 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்,தற்போது  புயலாக மாறி உள்ளது.இந்த புயல் மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த புயல் நாளை  குஜராத்தின் போர்பந்தர் அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய வானிலை மையம் வாயு புயல் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், வாயு புயல், அதிதீவிர புயலாக மாறி, நாளை காலை குஜராத் மாநிலம் போர்பந்தர் – டையூ பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் .புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 145 கி.மீ முதல் 170 கி.மீ வரை இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளது