நாளையும் திறக்கப்படும் பங்கு சந்தை… எவ்வளவு நேரம் தெரியுமா..?

நீங்கள் பங்குச் சந்தை வர்த்தகம் செய்கிறீர்கள் என்றால், இது உங்களுக்கு முக்கியமான செய்தி. உண்மையில், வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாள். பங்குச் சந்தையில் திங்கள் முதல் வெள்ளி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. அதே நேரத்தில், வார இறுதி நாட்களில் பங்குச்சந்தை விடுமுறை நாட்களாக உள்ளன. அதாவது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தை மூடப்பட்டிருக்கும்.

ஆனால் இந்த வாரம் பங்குச்சந்தை சனிக்கிழமை அதாவது நாளை திறந்திருக்கும். இந்த வாரம் நீங்கள் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்து சம்பாதிக்க இன்னும் ஒரு நாள் உள்ளது. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ( NSE ) மற்றும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ( BSE ) அளித்த தகவலின்படி, நாளை அதாவது சனிக்கிழமை பேரிடர் மீட்பு தளத்தில் சிறப்பு வர்த்தக அமர்வு நடைபெறும்.

இந்தத் தகவல் சுற்றறிக்கை மூலம்  பங்குச் சந்தையால் தெரிவிக்கப்பட்டது. இந்த வாரம் சந்தையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் சென்செக்ஸ் ஒரே நாளில் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. நிஃப்டியிலும் இந்த மாதிரி சரிவுவை கண்டுள்ளது. சந்தையில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சியிலிருந்து மீள, NSE மற்றும் BSE -வில் சிறப்பு அமர்வு நாளை திறக்கப்படுகிறது. சந்தையில் ஏற்பட்ட சரிவை மீட்பதற்காக முக்கிய பங்குச் சந்தைகளான NSE மற்றும் BSE  முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி!

பங்கு மற்றும் ஈக்விட்டி டெரிவேட்டிவ் பிரிவில் சிறப்பு வர்த்தக அமர்வு சனிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சந்தை நாளை இரண்டு அமர்வுகளில் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் PR அமர்வு காலை 9.15 மணி முதல் 10 மணி வரை நடைபெறும். இரண்டாவது DR தளம் காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan