கடலில் தீப்பற்றி எரிந்த கப்பல்..! 7 பேர் உயிரிழப்பு…!

Death

பிலிப்பைன்ஸில் கடலில் தீப்பற்றி எறிந்த கப்பலால் 7 பேர் உயிரிழப்பு. 

பிலிப்பைன்ஸில் பொலேனியோ என்ற சிறிய தீவில் இருந்து 134 பயணிகளுடன் கியூஸா துறைமுகத்திற்கு கப்பல் இன்று  புறப்பட்டது. கப்பல் துறைமுகத்திற்கு அருகே வந்த போது, திடீரென தீ பிடித்தது.

அப்போது காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக  பரவியது.படகு தீ பிடித்து எரிந்ததால், அச்சமடைந்த பயணிகள் தண்ணீரில் குதித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பிலிப்பைன்ஸ் கடலோர படையினர் தண்ணீரில் ததத்தளித்தவர்களை மீட்டனர். இருப்பினும் தீயில் சிக்கியும், தண்ணீரில் மூழ்கியும் 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போன 6 பேரை தேடும்  பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here