சென்செக்ஸ் குறியீடு 263.97 புள்ளிகள் உயர்ந்து, 57,602.18 புள்ளிகளாக வர்த்தகம்!

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத்தில் சரிவில் இருந்து தப்பித்து உயர்வுடனே வர்த்தகம்.

நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இந்திய பங்குச்சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 57,918 புள்ளிகள் என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது.

இன்று காலை தொடங்கிய வர்த்தகத்தில் பெரிய அளவிலான வளர்ச்சி அடையும் என எதிர்பாக்கப்பட்டது. ஆனால் F&O ஆர்டர்கள் முடியும் காரணத்தால் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. தற்போது, மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத்தில் சரிவில் இருந்து தப்பித்து உயர்வுடனே வர்த்தகமாகி வருகிறது.

அதன்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 263.97 (0.46%) புள்ளிகள் உயர்ந்து, 57,602.18 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்படுகிறது. இதுபோன்ற தேசிய பங்குசந்தை நிஃப்டி குறியீட்டு எண் 86.60 (0.51%) அதிகரித்து, 17,162.85 புள்ளிகளாக காணப்படுகின்றன.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 0.11% சரிந்து, 73.067 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த அமர்வில் 72.990 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 72.985 ரூபாயாக தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்