கொரோனா பாதிப்புக்கான இரண்டாம் அலை தொடங்கி விட்டது – பாகிஸ்தான் அரசு

கொரோனா பாதிப்புக்கான இரண்டாம் அலை தொடங்கி விட்டது.

உலகம் முழுவதும் கொரோன அவைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 3.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 6,745 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புக்கான இரண்டாம் அலை தொடங்கி விட்டதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு சுகாதார உதவியாளர் பைசல் சுல்தான் கூறுகையில், ஒரு சில வாரங்களுக்கு முன்பதாக, நாவலொன்றுக்கு 400-500 பேருக்கு தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

ஆனால், தற்போது இந்த எண்ணியானது, 700-750 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவு தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.