குமரியில் உள்வாங்கிய கடல்! திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் மண்டபம் செல்ல தடை!

கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதால் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

கன்னியாகுமரியில் திடீரென கடல் உள்வாங்கியதால் திருவள்ளூர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு போக்குவரத்து சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடல் உள்வாங்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் மண்டபம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மறு அறிவிப்பு வரும் வரை தடை தொடரும் எனவும் கூறியுள்ளனர். உலக புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் முக்கியமான ஒன்று இந்தியாவில் தென்கோடியில் அமைந்துள்ள குமரியாகும். கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் மண்டபத்தை காண, உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநில மக்கள் வந்து செல்வார்கள். இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் சுற்றுலா படகு சேவையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று முதல் கன்னியாகுமரி கடல் பகுதியில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. கடல் உள்வாங்கியுள்ளதாகவும், திடீரென அலைகள் அதிகமாக எழுந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை முதல் கடல் நீர் மட்டம் மிகவும் தாழ்வாக இருந்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளூர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவையை தற்காலிகமாக ரத்து செய்து, சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்