கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 வாரங்களில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் 3 மடங்கு அதிகம் – ஆய்வில் தகவல்!

கொரோனா பாதிப்பிற்கு பின் இரண்டு வாரங்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் மூன்று மடங்கு அதிகம் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் தற்பொழுதும் குறையாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் லான்செட் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வின்படி, 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு 3,48,481 கொரோனா நோயாளிகளிடம்  மேற்கொள்ளப்பட்டது எனவும், அதில் 86,742  பேருக்கு கடுமையான மாரடைப்பு மற்றும் பக்கவாத பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பது தெரிய வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள  ஸ்வீடனில் உள்ள உமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒஸ்வால்டோ பொன்சேகா ரோட்ரிகஸ் மற்றும் ஆய்வின் இணை முதல் எழுத்தாளர், கொரோனாவுக்கு பிறகு முதல் இரண்டு வாரங்களில் கடுமையான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்து மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஆய்வின் இணை ஆசிரியர்  இயோனிஸ் கட்சோலாரிஸ் அவர்கள் கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான இதய சிக்கல்களை சந்திக்கும் அபாயம் உள்ளது என இந்த ஆய்வு காட்டுவதாகவும், கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த ஆய்வு தெளிவுப்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal