மாணவர்களே…சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

சிபிஎஸ்இ(CBSE) 10 ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள பல தேர்வு மையங்களில் கடந்த ஆண்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை நடைபெற்றன.மேலும் 12 ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகள் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 22, 2021 வரை பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றன.

இந்நிலையில்,மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.இந்த ஆண்டுக்கான முடிவுகள் ஆஃப்லைன் முறையில் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்,இந்த ஆண்டு,சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அந்தந்த பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் அனுப்பியுள்ளது.

மேலும்,உள் மதிப்பீடு/நடைமுறை மதிப்பெண்கள் ஏற்கனவே பள்ளிகளில் உள்ளன என்றும்,எழுத்து தேர்வு முடிவுகள் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.