இந்தியாவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான உறவு சிறப்பு வாய்ந்தது – ராஜ்நாத்சிங்

இந்தியாவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான உறவு சிறப்பு வாய்ந்தது.

மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்  பயணமாக ரஸ்யா சென்றுள்ளார். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராக சோவியத் ரஷ்யா வெற்றி பெற்றதன் 75-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், மாஸ்கோவில்  விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

ராஜ்நாத்சிங், தனது இணைய பக்கத்தில், இந்தியா – ரஷ்யா இடையே பாதுகாப்புத் துறையில் உள்ள ஒப்பந்தங்களை மேம்படுத்துவதற்கு இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமையும் என பதிவிட்டிருந்தநிலையில், இப்பயணம் குறித்து கொரோனா வைரஸ்  பரவலுக்கு பிறகு இந்திய தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் என்னுடையதுதான். இதிலிருந்து இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் சிறப்பு  பற்றி அனைவருக்கும் புரிந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.