அடிப்படை தொண்டர்கள் தான் தலைமையை தேர்வு செய்ய வேண்டும்.! தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஓபிஎஸ் உரை.! 

தொண்டர்களால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி 2026ஆம் ஆண்டு வரையில் இருக்கிறது. – ஓ.பன்னேர்செல்வம் உரை. 

இன்று சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களோடு,  பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார். அப்போது அதிமுக தொடங்கிய காலம் முதல் தற்போது உள்ள நிலைப்படுவவரையில் பேசி வருகிறார்.

ஒருங்கிணைப்பாளர் : அவர் பேசுகையில், திராவிடர் காலமாக இருந்து, அதன் அதன் பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களால் பரிணாம வளர்ச்சி கண்டு உள்ளது அதிமுக. அதன் பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகள் கொண்டு வரப்பட்டன.

பதவி காலம் : அடிப்படை தொண்டர்கள் தான் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும்.  தற்போது உள்ள கட்சி தலைமை பெயரை கூட வாசிக்க மாட்டேன். அதற்கு கூட அவர்கள் தகுதியில்லாதவர்கள். என குறிப்பிட்டு தொண்டர்களால் வழங்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி 2026வரையில் இருக்கிறது. அதிமுக வேட்புமனுவில் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் தான் கையெழுத்திட வேண்டும். என குறிப்பிட்டு பேசினார் ஓ.பன்னீர்செல்வம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment