தமிழகத்தில் அரசியல் உள்நோக்கத்தோடு சோதனை நடத்தப்படுகிறது : டி.ராஜா

5

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையின் சோதனை தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா அவர்கள், தேர்தல் நன்கொடை பத்திரத்தின் மூலம் அதிகம் பலனடைந்தது பாரதிய ஜனதா தான் என்றும், குறிப்பிட்ட சில தலைவர்களை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடத்துவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பண ஆதிக்கம், நாடு முழுவதும் மேலோங்கி உள்ளதாகவும், அரசியல் உள்நோக்கத்தோடு தமிழ்நாட்டில் சோதனை நடத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.