ரயில் பாதையில் செருப்பை எடுக்க சென்று சிக்கிய முதியவரை காப்பாற்றிய காவலர்!

மும்பையில் ரயில் பாதையில் சிக்கிக்கொண்ட ஒரு வயதான நபரை காப்பாற்றிய காவல் துறை கான்ஸ்டபிள் ஹீரோ என பலராலும் சமூகவலைதளத்தில் புகழப்படுகிறார்.

போக்குவரத்து காவல்துறையினர் மட்டுமல்லாமல், காவலர்களும் பலர் தங்களது உயிரையும் மாய்த்து பிறரை காப்பாற்றி வருகின்றனர். அது போல தற்போது மும்பையில் உள்ள காவல்துறையினர் ஒருவர் தஹிசார் மும்பை ரயில் நிலையத்தில் 60 வயது கொண்ட நபர் ஒருவர் ரயில் செல்லும் பாதையில் தனது செருப்பு விழுந்து விட்டதை அடுத்து, தனது காலனியை எடுக்கச் சென்றுள்ளார். அதன்பின் ரயில் பாதையின் மறுபுறம் நகர்ந்து அதை அணிய முயற்சித்துள்ளார். அப்பொழுதே அருகில் நின்ற போலீஸ்காரர் ரயில் வருவதாக எச்சரித்துள்ளார்.

இருப்பினும் அதை கண்டுகொள்ளாமல், ரயில் வருவதற்குள் காலணிகளை மாட்டி விட்டு ஓடி வந்து விடலாம் என நினைத்த முதியவர், ஓடி வருவதற்குள் ரயிலும் வந்துவிட்டது. கடைசி நேரத்தில் கைகொடுத்து காவலர் காப்பாற்றிவிட்டார். அதனை அடுத்து தனது உயிருக்கு ஆபத்து விளைவித்ததற்காகவும், கவனக்குறைவாக சொல்லியும் கேட்காமல் நின்றதற்காக அவருக்கு ஒரு அறையும் கொடுத்துள்ளார். காவலர் அடித்து இருந்தாலும், அக்கறையுடன் கொடுத்து அடி என்பதால் சமூகவலைதளத்தில் இந்த வீடியோ தற்பொழுது பகிரப்பட்டு வருகிறது. சிசிடிவியில் பதிவாகிய இந்த வீடியோவின் மூலமாக 60 வயது கொண்ட அந்த நபர் சோலங்கி எனும் நபர் எனவும், காப்பாற்றிய காவலர் எஸ்பி நிகாம் என்பவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதோ அந்த வைரல் வீடியோ,

author avatar
Rebekal