நீர்த்தேக்க தண்ணீர் தொட்டிக்கு மேல் ஏறி நின்று தற்கொலைக்கு முயன்ற நபர்! காப்பாற்றிய காவல்துறை

நீர்த்தேக்க தண்ணீர் தொட்டிக்கு மேல் ஏறி நின்று தற்கொலைக்கு முயன்ற நபர்.

நெல்லை மேலப்பாளையத்தில் அடுத்த கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். கடந்த 1986ஆம் ஆண்டு, இவர் தனக்கு சொந்தமான சேவியர் காலனி என்ற இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இழப்பீடு தொகையை கொடுத்து எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இவர் பல்வேறு போராட்டங்களை நடத்தி, இன்று அதிகாலை சேவியர் காலனி உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி ஏறி, தனது இடத்திற்கு மூன்று மடங்கு இழப்பீடு தொகையை மாநகராட்சி தரவேண்டும் என்றும், அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் அவரிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் காவல்துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

காவல்துறை உதவி ஆணையர் சேகர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே தீயணைப்பு துறையினர் அவரை சுற்றிவளைத்து கீழே இறக்கினர். இதனை அடுத்து கணேசனை மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.