, ,

என்னை கல்யாணம் பண்ணிபீங்களா என்று கேட்ட நபர்.! வாயடைத்து போன கீர்த்தி சுரேஷ்.!

By

கீர்த்தி சுரேஷ் நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்ற போது, ஒரு நபர் தன்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்ட தருணத்தை மறக்க இயலாது என்று கூறியுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் பெங்குயின் படம் அமேசான் பிரேமில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். அதில் அவர் ரஜினிகாந்திற்கு சகோதரியாக நடிப்பதாக கூறப்படுகிறது அது மட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். மேலும் கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் அவர் தன்னால் மறக்க முடியாத தருணம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது ஒரு நகைக் கடை திறப்பு விழாவுக்கு சென்ற போது, கூட்டத்தில் இருந்து ஒரு நபர் அவரின் முன் வந்து போட்டோ ஆல்பம் மற்றும் ஒரு கடிதத்தையும் கொடுத்தாராம். அந்த கடிதத்தில் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா ? என்று எழுதியிருந்ததை பார்த்து ஷாக்காகி வாயடைந்து போய்விட்டாராம் யாரென்று தெரியாத அந்த நபரையும், தருணத்தையும் மறக்கமுடியாது என்று கூறியுள்ளார்.

Dinasuvadu Media @2023