ஆஸ்கார் விருதை தட்டிச்சென்ற நாட்டு நாட்டு பாடல் மற்றும் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்..! பிரதமர் வாழ்த்து..!

நாட்டு நாட்டு பாடல் மற்றும் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் திரைப்படம் ஆஸ்கார் விருதை தட்டிச்சென்ற நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து. 

உலக சினிமா கலைஞர்களுக்கு மிக பெரிய உயரிய அங்கீகாரமாக கருதப்படும் விருதுகளில் மிக முக்கியமானது ஆஸ்கர் விருது. இந்த விருது வழங்கும் விழா, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி அரங்கில் நடைபெறுகிறது.

அந்த வகையில், ஆஸ்கார் விருது பெற்ற இந்திய திரைப்படமான “தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்” க்கும், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் வாழ்த்து 

அந்த ட்விட்டர் பதிவில், ‘நாட்டு நாட்டு’ புகழ் உலகளாவியது. இன்னும் பல வருடங்கள் நினைவில் நிற்கும் பாடலாக இது இருக்கும். இந்த மதிப்புமிக்க மரியாதைக்காக ஒட்டுமொத்த குழுவும் வாழ்த்துக்கள்.

ஆஸ்கர் வென்ற கார்த்திகி, குனீத் மோங்கா ஆகியோருக்கு வாழ்த்துகள்; தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் திரைப்படம் நிலையான வளர்ச்சி மற்றும் இயற்கையோடு இயைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை அவர்களின் பணி அற்புதமாக எடுத்துரைக்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment