அடுத்த சம்பவம் ஸ்டார்ட்….முத்தையா -ஆர்யா பட பர்ஸ்ட் லுக் வெளியீடு.!

இயக்குனர் முத்தையா விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மதுரையில் நடைபெறும் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து ஒரு திரைப்படம் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஆர்யா நடிக்கிறார்.

கடைசியாக ஆர்யா நடிப்பில் வெளியான “கேப்டன்” திரைப்படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால் ஆர்யா கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார். இன்று திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, படத்தை ட்ரம் ஸ்டிக் நிறுவனம் தயாரிக்கிறது.

இதையும் படியுங்களேன்- படுக்கை அறையில் நச் க்ளிக்ஸ்.! ரசிகர்களை கிறங்க வைத்த தர்ஷா குப்தா..

வழக்கமாக கிராமத்து கதையை அருமையாக இயக்கம் முத்தையா இப்பொழுது ஆர்யாவை வைத்து புதிய திரைப்படம் இயக்குவதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மேலும் இந்த திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சித்து இத்தானி நடிக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில் மிரட்டலான லுக்கில் ஆர்யா இருக்கிறார். படத்திற்கு “காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment