நடிகர் விஜயின் மெர்சல் படம் படைத்த புதிய சாதனை….!!

  • நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • நடிகர் விஜயின் மெர்சல் படம் படைத்த புதிய சாதனை.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு.

இந்நிலையில், 2017-ம் ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வெளியான படம் மெர்சல். இந்த படம் வெளியாகி பல சாதனைகளை படைத்து, பல கோடிகளை வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், சீனாவின் Hainan தீவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் தளபதி விஜயின் மெர்சல் படம் திரையிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த விழாவில், பரியேறும் பெருமாள் படமும் திரையிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment