வந்தது புதிய சட்டம்.! மாமனார், மாமியார்களை கவனிக்காதவர்களுக்கு அபாரதத்துடன் சிறை தண்டனை..!

  • மாமியாரை கவனிக்காத மருமகளுக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை.
  • புதிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

கல்யாணமான தம்பதிகள், மாமனார் மற்றும் மாமியாரை கவனிக்காத மருமகன் மற்றும் மருமகளுக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற புதிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் மசோதாவின்படி கவனிக்க முடியாத பெற்றோர்களுக்கு பராமரிப்பு தொகையாக ரூ.10,000  அளிக்க வேண்டுமென்ற சட்டம் ஏற்கெனவே இருந்த வந்தது. இதனிடையே அதில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அதாவது கவனிக்க முடியாத பெற்றோருக்கான பராமரிப்பு தொகையின் வரம்பு பிள்ளைகளின் சம்பளத்தை கொண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறுபவர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் போன்ற இரண்டுமே விதிக்கப்படும் என்ற புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்