காலமான இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன்.!

இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகனான ஹோமோ ஜோ காலமாகியுள்ளார்.

By ragi | Published: Jul 16, 2020 11:37 AM

இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகனான ஹோமோ ஜோ காலமாகியுள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகனான ஹோமோ ஜோ காலமாகியுள்ளார். இவர் இசைஞானி இளையராஜாவின் அண்ணனான பாவலர் வரதராஜன் என்பவரின் இளைய மகன் மட்டுமில்லாமல் இயக்குநரும் ஆவர். இவர் இயக்குநர் ஆர். வி. உதயகுமாரின் கிழக்கு வாசல், சிங்கார வேலன், சின்ன கவுண்டர் உட்பட பல படங்களுக்கு இணை இயக்குநராக பணியாற்றி உள்ளார். அதனையடுத்து இவர் 'கற்க கசடற' என்ற படத்திற்கு வசன கரத்தாவாக இருந்ததோடு 'நாலு பேரும் ரொம்ப நல்லவங்க' என்ற படத்தை இயக்கியதும், அதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக ஹோமோ ஜோ உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் இன்று காலமானார். தற்போது அவரின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc