இன்று வெளியாகிறது நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய்பீம்’ திரைப்படம்…!

இன்று வெளியாகிறது நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய்பீம்’ திரைப்படம். 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நடிகர் சூர்யா அவர்கள் இப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காகப் போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டு ரசித்த நிலையில், இப்படம் குறித்து சிலகருத்துக்களை தெரிவித்த நிலையில், படக்குழுவுக்கும் முதல்வர் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரசிகர்களின் பெரிய அளவிலான எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் இன்று வெளியாகவுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.