,

விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கொடுங்க.! ஷங்கரை நெகிழவைத்த மாமனிதன்.!

By

நல்ல படங்கள் வெளியானால் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அந்த படங்களை பார்த்துவிட்டு பாராட்ட தவறியதே இல்லை. அந்த வகையில், தான் தற்போது இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு தான் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியிருப்பது  “மாமனிதன் என்ற ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை என் மனதிற்கு கொடுத்தது. இயக்குநர் சீனுராமசாமி தனது உள்ளத்தையும் உயிரையும் போட்டு இப்படியொரு அழகான கிளாசிக் படத்தை நமக்கு கொடுத்திருக்கிறார். விஜய்சேதுபதியின் அற்புதமான நடிப்புக்கு நிச்சயம் தேசிய விருதே கிடைக்கும். இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை கதையோடு ஒன்றி நம்மைக் கட்டிப் போடுகிறது” என பதிவிட்டுள்ளார்.

ஷங்கரின் இந்த வாழ்த்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இயக்குனர் சீனு ராமசாமி, நடிகை காயத்திரி ஆகியோ தங்களது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்கள். கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர்  இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளார்கள். இன்று வெளியான இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாக ஒரு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.