மனைவியை பார்ப்பதற்காக கொரோனா பராமரிப்பு மையத்தில் இருந்து தப்பியவர் 24 மணி நேரத்திற்குள் பிடிபட்டுள்ளார்!

கொரோனா பராமரிப்பு மையத்தில் இருந்து தனது மனைவியை பார்ப்பதற்காக மகாராஷ்டிராவில் உள்ள நபர் ஒருவர் தப்பித்து 24 மணி நேரத்திற்குள் போலீசாரால் பிடிபட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், மருத்துவமனைகளில் இடம்பெற்றுதால் பல ஹோட்டல்கள் மற்றும் வசதியான ஹாஸ்டல் போன்ற சில பகுதிகளை பராமரிப்பு மையம் ஆக மாற்றி அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டிலிருந்தவர்களுக்கு குடும்பத்தினரை பிரிந்து இருப்பது தற்பொழுது கடினமான ஒன்றாக தான் இருக்கும். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அங்கிருந்து தனது மனைவியை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் வெளியேறி 24 மணி நேரத்திற்குள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிடிபட்டுள்ளார். மேலும் அவர் ஏற்கனவே டெம்ரெசீவரையும் மருந்தகங்களில் இருந்து திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைக்கு பின்பு மீண்டும் அந்த நபர் தனிமைப்படுத்த மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும், இவர் தனது வீட்டிற்கு செல்வதற்காக தப்பிக்க முயன்றபோது கம்பி ஆங்காங்கு அவரது உடலில் கீறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

author avatar
Rebekal