சமூக விலகலை பின்பற்றுங்கள் ,இல்லையென்றால் முழு ஊரங்கு! தாக்ரே எச்சரிக்கை

சமூக விலகலை கடைப்பிடிக்காவிட்டால் ஊரங்கை கொண்டுவர வேண்டியிருக்கும் என்று மகாராஷ்ர முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்ரா மாநிலத்தில் கொரோனா தாக்கமானது அதிகரித்த வண்னம் உள்ளது. மேலும் அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறி வருகிறது.இந்நிலையில் அம்மாநிலத்தில் மட்டும் இதுவரை 15லட்சத்து 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இருக்க கொரோனா பரவல் குறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தனது அதிகாரப்பூர்வ் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,மாநிலத்தில் கொரோனா சூழலானது மாறிவருகிறது.கவனக்குறைவக இருந்தால் மீண்டும் நிலைமை மோசமடைந்து விடும் எனவே விழாக்காலங்களிலும் கூட முகக்கவசம் ,சமூக விலகல் போன்றவற்றை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் அவ்வாறு கடைபிடிக்காவிட்டால் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.



author avatar
kavitha